2 ஓட்டங்களுக்கு அனைத்து வீரர்களும் ஆட்டமிழப்பு!

Saturday, November 25th, 2017

இந்தியாவில் வெறும் இரண்டு ஓட்டங்களுக்கு அனைத்து வீராங்கனைகளும் ஆட்டமிழந்த சம்பவம் நடந்துள்ளது. இந்திய கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒருநாள் போட்டியிலேயே இச்சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவுடன் மோதிய போட்டியில் நாகலாந்து தொடக்க வீராங்கனை பெற்ற ஒரு ஓட்டம், உதிரியாக கிடைத்த ஓட்டம் தவிர அனைத்து வீராங்கனைகளும் ஆட்டமிழந்தனர். மொத்தம் 17 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், 16 ஓவர்களில் ஒரு ஓட்டம் கூட பெறவில்லை.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கேரளா முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related posts: