2 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பிய வேகப்பந்து வீச்சாளர்!

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஒரு நாள் அணியில் இடம் பிடித்துள்ள வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, சாம்பியன்ஸ் கிண்ணத்தில் சிறப்பாக விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் வரும் யூன் 1ம் திகதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி, 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஒரு நான் அணியில் இடம் பிடித்துள்ளார்.இதுகுறித்து முகமது ஷமி கூறியதாவது, இந்த 2 ஆண்டுகளில் எனது உடல் நலத்தில் கவனம் செலுத்தி, பலவீனங்களை கண்டறிந்து சரி செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டேன்.
சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் சிற்பபாக விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடியது எனக்கு நல்ல அனுபவமாக உள்ளது என கூறியுள்ளார்.
Related posts:
|
|