2வது போட்டிக்கு அல்ஜாரி ஜோசப்பைக் களம் இறக்கும் வெஸ்ட் இன்டீஸ்!

Thursday, July 28th, 2016

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 19 வயதான புதுமுக வேகப் பந்து வீரர் அல்ஜாரி ஜோசப் சேர்க்கப்பட்டுள்ளார்.

விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட்ணி மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா- மேற்கிந்திய அணிகளிடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆன்டிகுவாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 92 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.

இந்நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் கிங்ஸ்டனில் தொடங்குகிறது. முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிக்காக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.2-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் 14-பேர் கொண்ட மேற்கிந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் 19 வயதான புதுமுக வேகப் பந்து வீரர் அல்ஜாரி ஜோசப் இடம் பெற்றுள்ளார்.

முதல் டெஸ்ட்ன் போது மேற்கிந்திய தீவின் பந்து வீச்சை எதிர்கொண்ட இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டது. 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 566 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. குறிப்பாக இந்திய அணி ஆல் அவுட் ஆகவில்லை. விராத் கோஹ்லி தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதேபோல ஆல்ரவுண்டர் அஸ்வின் 113 ரன்களை குவித்தார்.

இந்நிலையில், இந்திய பேட்டிங் ஆர்டரை உடைக்கும் வகையில் மேற்கிந்திய தீவுகள் அணி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக அந்த அணி புதுமுக வேகப்பந்து வீச்சாளரை அணியில் சேர்ந்துள்ளது. வேறு மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

அல்ஜாரி ஜோசப் இந்த ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டவருக்கான உலக கோப்பை போட்டியில் 13 விக்கெட் கைப்பற்றி இருந்தார். ஆன்டிகுவாவைச் சேர்ந்த அல்ஜாரி ஜோசப் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை பதம் பார்ப்பாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கிரேக் பிராத்வெய்ட், ராஜேந்திர சந்திரிகா, டேரன் பிராவோ, மார்லன் சாமுவேல்ஸ், ஜெர்மைன் பிளாக்வுட், ரோஸ்டன் சேஸ், ஷேன் டோவ்ரிச் (விக்கெட் கீப்பர்), கார்லஸ் பிராத்வெயிட், தேவேந்திர பிஷு, ஷன்னான் கேப்ரியல், லியான் ஜான்சன், கும்மின்ஸ், அல்ஜாரி ஜோசப்.

Related posts: