2வது சுற்றுக்கு ரோஜர் பெடரர் முன்னேற்றம்!

Wednesday, January 18th, 2017

மெல்பேர்னில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின், ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், வெற்றிபெற்றுள்ளார்.

திங்கட்கிழமை நடைபெற்ற தொடக்க போட்டியில், ஆஸ்திரியாவின் தகுதி நிலை வீரரான ஜூர்ஜென் மெல்சரை ரோஜர் பெடரர், எதிர்கொண்டார்.

கால் முட்டி காயத்தால் 6 மாதங்கள் ஓய்வுக்கு பிறகு ரோஜர் பெடரர், இப்போட்டியில் களமிறங்கியுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 2 மணி 6 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில், 35 வயதான பெடரர் 7-5, 3-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

பெடரர் அடுத்த சுற்றில் தரவரிசையில் 200வது இடம் வகிக்கும் அமெரிக்க தகுதி நிலை வீரர் நோ ருபினுடன் மோதவுள்ளார்.

colfer-720x450140940922_5157189_17012017_AFF_CMY

Related posts: