2ஆவது போட்டி இரத்து ஏன்? விசாரண ஆரம்பம்!
Monday, February 6th, 2017
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி 3நாள் போட்டிகள் கொண்ட சேப்பல்-ஹாட்லி தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் நியூசிலாந்து 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2ஆவது போட்டி நேப்பியர் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் போட்டிக்கு முன்பாக மழை பெய்தது. மழை நின்ற பிறகு நடுவர்கள் மைதானத்தை ஆய்வு செய்தனர்.
ஆனால் களத்தில் ஈரப்பதம் அதிகமான இருந்ததால் போட்டியை ரத்துச் செய்வதாக அறிவித்தனர். காலையில் பெய்த மழை திட்டமிடல் நேரத்தில் போட்டியை தொடங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தியிலருந்தாலும், அதன்பிறகு மைதானத்தின் சூழ்நிலைகளில் முன்னேற்றம் காணப்பட்டதாக தெரிகிறது.
இதன் மூலம் குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டியையாவது மைதான ஊழியர்களை கொண்டு நடத்தியிருக்க முடியும் எனக் கூறப்பட்டது. ஆனால் மழை நீர் வடிகால் வசதிகளில் காணப்பட்ட குளறுபடி போட்டியை ரத்துச் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளியிலருக்கலாம் எனவம் சந்தேகிக்கப்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? என்பதை கண்டறிய உடனடியாக விசாரணை நடத்த நியூசிலாந்து கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது.
Related posts:
|
|