19 வயதுக்கு உட்பட்டோருக்கான வடமாகாண கிரிக்கெட் அணி!

Monday, May 21st, 2018

19 வயதிற்குட்பட்டோருக்கான வடமாகாண கிரிக்கெட் அணி தெரிவாகியது. இலங்கை கிரிக்கெட் சபை எதிர்வரும் 31 ஆம் திகதியிலிருந்து ஜீன் 10 ஆம் திகதி வரை கொழும்பில் நடத்தும் 19 வயதிற்குட்பட்டோருக்கான மாகாணங்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக வடமாகாண கிரிக்கெட் அணி நேற்று நடைபெற்ற தெரிவுக்குழு கூட்டத்தில் தெரிவாகியது.

வடமாகாண கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் திரு.எஸ்.பி.இராஜீவன் தலைமையில் மாகாண மற்றும் மாவட்டப் பயிற்சியாளர்களையும் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தெரிவுக்குழுத் தலைவர்களையும் வடமாகாண பாடசாலைகளின் பிரதிநிதியையும் உள்ளடக்கிய வடமாகாண தெரிவுக்குழுவே இந்த அணியினை தெரிவு செய்தது.

தெரிவு செய்யப்பட்ட அணியின் விவரம் பின்வருமாறு,

எஸ்.மதுசன் (தலைவர்) ௲ யாழ். மத்திய கல்லூரி, என்.மனிக் நிதுஷன் (உப தலைவர்) சென்.பற்றிக்ஸ், அபினாஸ் – யாழ்.சென் ஜோன்ஸ், பானுஜன் – கொக்குவில் இந்து, சௌமியன் – யாழ். சென் ஜோன்ஸ், அஜிந்தன் – ஸ்கந்தவரோதயா, தனுஷன் – ஸ்கந்தவரோதயா, வரலக்ஷன் – மகாஜனா, ஜெயதர்ஷன் – யாழ். மத்தி, ராஜ் கிளின்ரன் – யாழ்.மத்தி, விஜயகாந்த் – யாழ். மத்தி, விதுஷன் – யாழ். மத்தி, டினோஷன் – யாழ்.சென் ஜோன்ஸ், கபிலன் – புதுக்குடியிருப்பு மத்தி, இயலரசன் – யாழ். மத்தி.

Related posts: