19 வயதுக்குட்பட்ட மாகாண அணிகளுக்கிடையிலான தொடர்: வடக்கு வெற்றி!

இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் 19 வயதுக்குட்பட்ட மாகாண அணிகளுக்கு இடையிலான தொடரில் இடம்பெற்ற ஆட்டமொன்றில் வடமாகாண அணி வெற்றிபெற்றது.
கொழும்பு என்.சி.சி. மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வடமாகாண அணியை எதிர்த்து வடமத்திய மாகாண அணி மோதியது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற வடமத்;திய மாகாணம் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய வடமாகாண அணி 47 பந்துப் பரிமாற்றங்களில் 211 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது. அதிகபட்சமாக பானுஜன் 55 ஓட்டங்களையும் டி.தினோசன் 50 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சமரவிக்ரம 5 இலக்குகளை வீழ்த்தினார்.
211 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய வட மத்திய மாகாண அணி 36.1 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 76 ஓட்டங்களை மட்டும் பெற்றது. அதிகபட்சமாக அவிஸ்க சேனாதீர 21 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் விதுசன் 5 இலக்குகளையும் எம்.அபினாஸ் 2 இலக்குகளையும் வீழ்த்தினர்.
Related posts:
|
|