19 வயதிற்குட்பட்ட இலங்கை இளையோர் அணி வெற்றி! 

Tuesday, January 8th, 2019

19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கட் அணிக்கும் அவுஸ்திரேலியா கிரிக்கட் அணிக்கும் இடையில் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 64 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

நேற்று இடம்பெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 256 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் நிபுன் தனஞ்சய 71 ஓட்டங்களையும், சொனால் தினுஷ 50 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

256 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா இளையோர் அணி 46.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 192 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் அவுஸ்திரேலியா இளையோர் அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், மூன்று போட்டிகளை கொண்ட இந்த தொடரை அவுஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.