17 வருடங்களின் பின் காலி சர்வதேச விளையாட்டரங்கில் ஒருநாள் தொடர்!

Wednesday, June 21st, 2017

இலங்கை – ஸிம்பாவே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்குகொள்வதற்காக ஸிம்பாவே அணி எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கை வருகைதரவுள்ளது.

குறித்த போட்டி இம்மாதம் 30ஆம் திகதி காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.17 வருடங்களின் பின்னர் காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் ஒரு நாள் போட்டித்தொடர் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.ஸிம்பாவே அணி இலங்கை அணியுடன் நான்கு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளதுடன் இந்தப்போட்டிகளில் , இரண்டு காலி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் ஜூலை மாதம் 2ம் திகதி நடைபெறவுள்ளது

Related posts: