17 சிக்சர்களுடன் இரட்டை சதம்! இளம் வீரர் சாதனை!

Wednesday, December 5th, 2018

அவுஸ்திரேலியாவில் U19 தேசிய சாம்பியன்ஷிப் தொடரில், இளம் வீரர் ஆலிவர் டேவிஸ் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்ததுடன் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய சாம்பியன்ஷிப் போட்டி அடிலெய்டு நகரில் நடைபெற்றது. இதில் நார்தர்ன் வாரியர்ஸ்-நியூ சவுத் வேல்ஸ் அணிகள் மோதின.

நியூ சவுத் வேல்ஸ் அணி வீரர் ஆலிவர் டேவிஸ் எதிரணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். 74 பந்துகளில் சதம் விளாசிய அவர், அதன் பிறகு ருத்ரதாண்டவம் ஆடினார்.

40வது ஓவரில் தொடர்ந்து 6 சிக்சர்களை பறக்க விட்டார் ஆலிவர். இதன்மூலம் சதம் அடித்த அடுத்த 39 பந்துகளில் இரட்டை சதம் விளாசினார். மொத்தம் 115 பந்துகளை சந்தித்த ஆலிவர், 17 சிக்சர்களுடன் 207 ஓட்டங்கள் குவித்தார்.

ஆலிவரின் அதிரடியால் நியூ சவுத் வேல்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 406 ஓட்டங்கள் குவித்தது. அத்துடன் 168 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றது.

50 ஓவர் போட்டிகளில் ரோஹித் ஷர்மா, ஏபி டிவில்லியர்ஸ், கிறிஸ் கெயில் ஆகியோர் ஒரே ஓவரில் 16 சிக்சர்கள் அடித்துள்ள நிலையில், 18 வயதான ஆலிவர் 17 சிக்சர்களை விளாசியுள்ளார்.

மேலும் கிப்ஸ், யுவ்ராஜ் சிங், சர் கார்பீல்ட், சோபர்ஸ் ஆகியோருக்கு அடுத்தபடியாக ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் ஒரே ஓவரில் ஆறு சிக்சர்கள் அடித்தது குறித்து ஆலிவர் கூறுகையில், ‘முதல் இரண்டு பந்துகளை சிக்சர் அடித்தவுடன், அனைத்தையும் சிக்சர்களாக அடிக்க முடிவு செய்தேன். அது கடைசியில் நிறைவேறியது’ என தெரிவித்துள்ளார்.

Related posts: