16 அணிகள் பங்கு கொள்ளும் அட்டவணை வெளியானது!

Wednesday, December 13th, 2017

ஐரோப்பாவைச் சேர்ந்த பிரபல உதைப்பந்தாட்ட அணிகள் மோதும் சம்பியன்ஸ் லீக் தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ள நிலையில், லீக் போட்டிகளில் வெற்றிபெற்று 16 அணிகள் நொக்-அவுட் சுற்றுகளுக்கு தகுதிபெற்றிருந்தன.

குறித்த 16 அணிகளும் எந்த்ந்த அணிகளை எதிர்கொள்ளவுள்ளன என்பது தொடர்பான அட்டவணை வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கான எதிரணியுடன் இரண்டு லீக் போட்டிகளில் விளையாடி, அதிக கோலகளைப்பெற்றுக்கொள்ளும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுக்கொள்ளும். நடப்பு சம்பியனான ரியல் மெட்ரிட் அணி, பிரேசிலின் முன்னணி வீரர் நெய்மர் விளையாடும் பி.எஸ்.ஜி அணியை எதிர்கொள்ளவுள்ளது. இவ்விரு அணிகளுக்குமான போட்டி பெப்ரவரி 14 மற்றும் மார்ச் 6ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இதேவேளை நட்சத்திர வீரர் லைனல் மெஸ்ஸியின் அணியான பார்சிலோனா அணி, செல்ஸி அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த அணிகளுக்கான போட்டி பெப்ரவரி 20ம் திகதி மற்றும் 14ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

பிற அணிகளுடனான போட்டிகளைப்பொறுத்தவரை, டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர் அணி ஜுவான்டஸ் அணியையும், பெசெல் அணி, மென்செஸ்டர் சிட்டி அணியையும், பொர்டோ அணி லிவர்பூல் அணியையும், மென்செஸ்டர் யுனைடட் அணி செவில்லா அணியையும், பெயார்ன் முன்சென் அணி பெசிக்டாஸ் அணியையும், செக்தார் டொனெட்ஸ்க் அணி ரோமா அணியையும் எதிர்கொள்கின்றன.

அடுத்த வருடம் விருந்து படைக்க காத்துள்ளது லீக் போட்டிகள்

Related posts: