15000 ஓட்டங்களை பெற்று கோலி!

Friday, September 8th, 2017

இந்திய அணி வீரர் விராட் கோலி சர்வதேச போட்டிகளில் 15 ஆயிரம் ஓட்டங்களை வேகமாக கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

உலகின் தலைசிறந்த துடுப்பாட்டக்காரர்ளில் ஒருவர் விராட் கோலி. இந்திய அணியின் 3 நிலை அணிக்கும் தலைவராக இருக்கும் அவர் இலங்கைக்கு எதிராக நேற்று நடந்த 20 ஓவர் போட்டியில் 82 ஓட்டங்களை எடுத்தார்.

7-வது ஓட்டத்தைப் பெற்றபோது விராட்கோலி சர்வதேச போட்டிகளில் 15 ஆயிரம் ஓட்டங்களை தொட்டார். இந்த ஓட்டங்களை வேகமாக கடந்தவர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.
அவர் 333 இன்னிங்சில் 15,075 ஓட்டங்கள் எடுத்து உள்ளார். இதற்கு முன்பு ஹசிம் அம்லா (தென்ஆப்பிரிக்கா) 336 இன்னிங்சில் 15 ஆயிரம் ஓட்டங்களை கடந்ததே சாதனையாக இருந்தது.

விராட் கோலி டெஸ்டில் 4658 ஓட்டங்களும் (101 இன்னிங்ஸ்), ஒருநாள் போட்டியில் 8,587 ஓட்டங்களும் (186), 20 ஓவரில் 1830 ஓட்டங்களும் (46) எடுத்துள்ளார். 50 சராசரிக்கு மேல் பெற்ற ஒரே வீரர் என்ற சாதனையிலும் அவர் உள்ளார். சர்வதேச போட்டியில் 15 ஆயிரம் ஓட்டங்களை தொட்ட 7-வது இந்தியர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். சர்வதேச அளவில் 33-வது வீரர் ஆவார்.

மேலும் 20 ஓவர் போட்டியில் சேசிங்கில் அதிக ஓட்டங்களை எடுத்தவர் என்ற சாதனையையும் விராட் கோலி பெற்றார். அவர் 1016 ஓட்டங்களை எடுத்துள்ளார். 20 ஓவர் போட்டியில் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர்களில் அவர் 3-வது இடத்தில் உள்ளார்.

Related posts: