13 வயதுப் பிரிவினருக்கான துடுப்பாட்டம்- இறுதிக்குள் யாழ். இந்து

Friday, February 16th, 2018

யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் நடத்தும் 13 வயதுப் பிரிவினருக்கான துடுப்பாட்டத் தொடரில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மைதானத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அரையிறுதி ஆட்டத்தில் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிபிஅணியை எதிர்த்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய

சென்.ஜோன்ஸ் கல்லூரிபிஅணி 27.4 பந்துப் பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 87 ஓட்டங்களைப் பெற்றதுஅதிகபட்சமாக றன்டியோன் 20 ஓட்டங்களையும், கிருசாந் 18 ஓட்டங்களையும், ஹனுசாந்

13 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியின் சார்பில் கயன் 6 இலக்குகளையும், சந்தோஸ் 2 இலக்குகளையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 314 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. அதிகபட்சமான சாருஜன் 87 ஓட்டங்களையும், கஜன் 50 ஓட்டங்களையும், யோகிசன் 48 ஓட்டங்களையும் பெற்றனர்பந்துவீச்சில் றன்டியோன் 3 இலக்குகளையும், சஜிபன், கிருஸ்ணன் ஆகியோர் தலாஇலக்குகளையும் வீழ்த்தினர்தனது இரண்டாவது இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ்

கல்லூரி அணி 10 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 5 இலக்குகளை இழந்து 55ஓட்டங்களைப் பெற்றிருந்த போது நாள் முடிவுக்கு வந்தது. முதன் இன்னிங்ஸில்முன்னிலை பெற்ற காரணத்தால் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி இறுதிக்குத் தகுதிபெற்றது.

Related posts: