13வயதுப் பிரிவு துடுப்பாட்டத்தில் சென்.ஜோன்ஸ் தேசியச் சம்பியன் !

Thursday, March 1st, 2018

இலங்கைப் பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் நடாத்திய 13 வயதுக்கு உட்பட்ட இரண்டாம் பிரிவு அணிகளுக்கு இடையிலான தேசிய மட்ட துடுப்பாட்டத் தொடரில் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி கிண்ணம் வென்றது .இந்தப் பெறுபேற்றை அடுத்து அந்த அணி முதலாம் பிரிவுக்கு முன்னேற்றம் கண்டது.

 கோட்டை ஆனந்த சாஸ்த்ராலய கல்லூரி மைதானத்தில் நேற்று முன் தினம் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து கலகிட்டியாவ மத்திய கல்லூரி அணி மோதியது.

நாணையச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் அணி  முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கலகிட்டியாவ மத்திய கல்லூரி அணி 115 ஓட்டங்களில் சகல இலக்குகளையும் இழந்தது. அதிகபட்சமாக ராஜபக்ச 44 ஓட்டங்களையும் சானக 23 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் அபிசேக் 6 இலக்குகளையும் விது~ன், எபநேசர் இருவரும் தலா 2 இலக்குகளையும் கைப்பற்றினர் .தனது முதலாவது இன்னிங்ஸீக்காத் துடுப்பெடுத்தாடிய சென்.ஜோன்ஸ்; கல்லூரி அணி 40 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 7 இலக்குகளை இழந்து 139 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது .அபிசேக் 76 ஓட்டங்களைப் பெற்றார் .இந்த வெற்றியை அடுத்து 13வயதுப் பிரிவில் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி இரண்டாம் தரத்திலிருந்து முதலாம்  தரத்திற்கு முன்னேற்றம் கண்டது.

Related posts: