12 ஓட்டங்களினால் இங்கிலாந்து வெற்றி !

Sunday, May 12th, 2019

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற 2 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி, 12 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 373 ஓட்டங்களைப் பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பில் ஜோஸ் பட்லர்  ஆட்டமிழக்காமல் 110 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்தார்.

இதையடுத்து, 374 என்ற வெற்றி இலக்கை நோககி பதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி, 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 361 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் பகர் சமன் 138 ஓட்டங்களை அதிகூடுதலாகப் பெற்றுக்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: