1,150 கோடி ரூபா இழப்பீடு வேண்டும்- இந்தியாவிடம் கோரும் பாகிஸ்தான்!

இந்தியாவுடனான இருதரப்புத் தொடர் பாதிக்கப்பட்ட விடயத்தில் தமக்கு சுமார் ஆயிரத்து 150 கோடி ரூபா இழப்பீடாக வழங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட்சபை.
மும்பைத் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா – பாகிஸ்தானுடன் இரு தரப்புத் தொடரில் விளையாட மறுத்து வருகிறது. 2009 ஆம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தான் சென்று விளையாடிய போது இலங்கை அணி வீரர்கள் பயணித்த பேருந்து மீது ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இது இந்தியாவுக்கு மேலும் சாதகமாக அமைய கிரிக்கெட்டின் போர்களில் ஒன்றான இந்தியா – பாகிஸ்தான் இரு தரப்புத் தொடர் கைவிடப்பட்டது. கடந்த வருடம் இருநாட்டின் கிரிக்கெட்சபைகளும் மீண்டும் தொடரை நடத்திட எத்தனித்தன.
எனினும் எல்லைகளில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக தொடரை நடத்துவதில் இருந்து இந்தியா பின் வாங்கியது. ஆனால் தம்முடன் இந்தியா கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது.
இந்தியா தொடரிலிருந்து பின் வாங்கியதால் தமக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று பல முறை கருத்து தெரிவித்து வந்த பாகிஸ்தான் இலங்கை மதிப்பில் சுமார் ஆயிரத்து 150 கோடி ரூபா தர வேண்டும் என்று கேட்டு பன்னாட்டு கிரிக்கெட் சபையிடம் முறையிட்டுள்ளது.
Related posts:
|
|