1000 தங்கப்பதக்கங்களை அள்ளிய அமெரிக்கா!

Sunday, August 14th, 2016

ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடக்கத்தில் இருந்து பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற அமெரிக்கா, நேற்று ரியோ ஒலிம்பிக்கில் 4×100 மீட்டர் மகளிர் மெட்லி ரிலே நீச்சல் போட்டியில் வென்ற தங்கத்துடன் சேர்த்து இதுவரை 1000 தங்கப் பதக்கங்களை குவித்துள்ளது.

குறிப்பாக, இந்த ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக்கில் மட்டும் அமெரிக்கா நேற்றுவரை 23 தங்கப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இவற்றில் அமெரிக்க நீச்சல் வீரரான மைக்கேல் பெல்ப்ஸ் மட்டும் 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், ஒலிம்பிக் ஸ்டாட்ஸ் என்ற இணையதளத்தில் காணப்படும் புள்ளிவிபரங்களின்படி, இதுவரை அமெரிக்கா 977 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளதாக காணப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக 473 தங்கப்பதக்கங்களை வென்ற முன்னாள் சோவியத் யூனியன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Related posts: