100 ஆவது போட்டியில் இலங்கையை தோற்கடித்து பங்களாதேஷ்!

Monday, March 20th, 2017

இலங்கை அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று பங்களாதேஸ் அணி தனது முதலாவது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துள்ளது. பங்களாதேஸ் அணிக்கு இது நூறாவது போட்டியாகும்.

இலங்கைகான சுற்றுலாவை மேற்கொண்டுள்ள பங்களாதேஸ் அணி 3 டெஸ்ட் போட்டிகள், 3 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 இருபதுக்கு 20 போட்டிகளிலும் பங்கேற்க உள்ளது.
இரண்டாவது இன்னிங்சில் 191 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கில் விளையாடிய பங்களாதேஸ் அணி 4 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது.

இதற்கு முன்னர் ஒரு போதும் பங்களாதேஸ் அணி டெஸ்ட் போட்டியொன்றில் இலங்கையை வெற்றிகொண்டிருக்கவில்லை. இதில் இன்னுமொரு விசேட அம்சம் என்னவென்றால் பங்களாதேஸ்  அணியின் பிரதான மற்றும் துடுப்பாட்ட பயிற்சியாளர்களாக இலங்கை வீரர்களாக சந்திக ஹத்துருசிங்க மற்றும் திலான் சமரவீர ஆகியோர் செயற்படுகின்றனர்.

இந்த தொடரில் முதல் இன்னிங்சில் இலங்கை அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 338 ஓட்டங்களை பெற்றது. அதற்கு பதிலளித்தாடிய பங்களாதேஸ் அணி முதல் இன்னிங்சில் 467 ஓட்டங்களை பெற்றது.

இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி சகல விக்கட்டுகளையும் இழந்து சகல விக்கட்டுகளையும் இழந்து 319 ஓட்டங்களை பெற்றது.  இதன்படி 191 என்ற வெற்றியிலக்கை அடைவதற்கு தயாராகிய பங்களாதேஸ் அணி 6 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து இந்த சாதனையை படைத்துள்ளது.

Related posts: