10  இலட்சம் பேர் கண்டுகளித்த போட்டிகள்!

Sunday, October 22nd, 2017

இந்தியாவில் முதன்முறையாக நடைபெற்று வரும் 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரை பத்து இலட்சம் ரசிகர்கள் மைதானத்திற்கு வந்து பார்த்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையானது கால்பந்து போட்டியை விட குறைவாகும்.

எனவே 17 வயதிற்க்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்தினால் வரவேற்பு கிடைக்குமா என்ற சந்தேகமிருந்த நிலையில் காலிறுதிக்கு முன்பாகவே பத்து லட்சம் ரசிகர்கள் நேரடியாக போட்டிகளை கண்டிருப்பது இந்தியாவில் கால்பந்து போட்டிக்கான வளர்ச்சியை உறுதி செய்துள்ளது.

இதுவரை 10 லட்சத்து 7 ஆயிரத்து 396 பேர் இந்த போட்டிகளை கண்டுகளித்துள்ளனர்.எனவே, 1985ம் ஆண்டு சீனாவில் நடந்த கால்பந்து தொடரை 12 லட்சம் ரசிகர்கள் பார்த்த சாதனையை இந்தியா விரைவில் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Related posts: