முட்டாள் தனமாக அட்டவணை – உஷேன் போல்ட்!

நடைபெற்றுவரும் ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தய போட்டியில் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிக்கான அட்டவணை முட்டாள்தனமாக இருந்தது என போல்ட் தெரிவித்துள்ளார்.
ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தய இறுதி போட்டி கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்றது.இதில் ஜமைக்காவை சேர்ந்த உசைன் போல்ட் தங்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
ஆனால் இவருடைய முந்தைய சாதனையான 9.58 வினாடிகளின் சாதனையை இம்முறை முறியடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர் .போல்ட்டோ பந்தய தூரத்தை 9.81 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.
இது குறித்து அவர் கூறியதாவது, யார் இந்த அரையிறுதி மற்றும் இறுதி போட்டிக்கான அட்டவணைகளை தயார் செய்தது என தெரியவில்லை. இது உண்மையிலே முட்டாள்தனமாக இருந்தது என்று கூறினார். ஒரு போட்டி முடிந்து அடுத்த போட்டிக்கு உடனடியாக தயார் ஆனதால் தான், தன்னால் வேகமாக ஓட முடியவில்லை.
மேலும் பயிற்சி எடுத்துகொள்ளும் இடத்திலேயே ஜாக்கிங் செய்து, இறுதி போட்டிக்கு தயார் ஆக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் தகுதி சுற்றை விட அரையிறுதி போட்டி சிறப்பாகவே அமைந்தது என தெரிவித்தார்.
Related posts:
|
|