டி20 உலகக்கிண்ணத்தை மேற்கிந்தியா  வெல்ல உதவிய தர்மசேனா!

Monday, April 11th, 2016

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின.

இதில் இங்கிலாந்தின் 156 ஓட்டங்கள் இலக்கை எட்டும் போது முதல் 3 ஓவர்களிலே கெய்ல், சார்லஸ், சிம்மன்ஸ் ஆகிய முக்கிய விக்கெட்டுகளை மேற்கிந்திய தீவுகள் அணி இழந்தது.

இந்நிலையில் கடைசி வரை போராடிய சாமுவேல்ஸ் 66 பந்தில் 85 ஓட்டங்கள் குவித்து மேற்கிந்திய தீவுகள் அணி இலக்கை எட்ட உறுதுணையாக இருந்தார். ஆனால் இவர் 27 ஓட்டங்களிலே வெளியேறி இருக்க வேண்டியது.

ப்லன்கெட் வீசிய 7வது ஓவரின் முதல் பந்தில் சாமுவேல்ஸ் விக்கெட் கீப்பர் பட்லரிடம் பிடி கொடுத்தார். இதை நடுவர் ரொட் டக்கர் விக்கெட் கொடுக்க, சாமுவேல்ஸ் பெவிலியனை நோக்கி நகர்ந்து விட்டார்.

இந்நிலையில் இந்த விக்கெட்டில் திடீரென சந்தேகமடைந்த இலங்கை நடுவர் குமார் தர்மசேனா சாமுவேல்ஸை பவுண்டரி அருகே காத்திருக்க கூறி விட்டு சக நடுவருடன் இந்த விக்கெட் தொடர்பாக விவாதித்தார்.

ரொட் டக்கரிடம் தர்மசேனா கேட்ட போது சரியான ’அவுட்’ என்றே அவர் கூறினார். இருப்பினும் தர்மசேனா 3வது நடுவர் மார்சஸூடம் தெளிவாக பார்க்க சொன்ன போது, டிவி ரிப்ளையில் பட்லர் பந்தை பிட்ச் செய்து பிடித்திருப்பது தெளிவாக தெரிந்தது.

இதனாலே சாமுவேல்ஸ் தொடர்ந்து விளையாடி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கிண்ணம் வென்று கொடுத்தார். சரியான சமயத்தில் மட்டும் தர்மசேனா குறுக்கிடாமல் போய் இருந்தால் இங்கிலாந்துக்கே கிண்ணம் கிடைத்திருக்கும்.

துல்லியமாக கணிக்கும் தர்மசேனாவின் இந்த செயலை ரசிகர்கள் பாராட்டினாலும், அவரால் இங்கிலாந்துக்கு கிண்ணம் பறி போய்விட்டதாகவும் புலம்பி வருகின்றனர்.

Related posts: