ஹாட்ரிக் விக்கெட்டுடன் வரலாறு சாதனை!

Tuesday, November 12th, 2019


இந்தியா – பங்களதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 வது மற்றும் கடைசி ரி 20 போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 174 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் 175 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பங்களதேஷ் துடுப்பெடுத்தாடியது. அந்த அணி ஒரு கட்டத்தில் 12.5 ஓவரில் 110 ஓட்டங்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு 43 பந்தில் 65 ஓட்டங்களே தேவைப்பட்டது.

தீபக் சாஹர் வீசிய 13 வது ஓவரில் கடைசி பந்தில் முகமது மிதுன் ஆட்டமிழந்தார். இதுதான் போட்டியின் திருப்பு முனையாக அமைந்தது. மேலும், இறுதிக் கட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி பங்களதேஷ் அணியை 144 ஓட்டங்களில் சகல விக்கெட்டுக்களையும் இழக்கச் செய்தார்.

மற்ற பந்து வீச்சாளர்கள் ஓட்டங்களை கொடுத்தாலும் தீபக் சாஹர் கட்டுக்கோப்பாக பந்து வீசி 3.2 ஓவரில் 7 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

இதன்மூலம் ரி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற பெருமைய பெற்றுள்ளார்.

இதற்கு முன் இலங்கையின் அஜந்த மெண்டிஸ் சிம்பாப்வே அணிக் கெதிராக 8 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. தற்போது சாஹர் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

16 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அஜந்த மெண்டிஸ் 3 வது இடத்தில் உள்ளனார். சாஹல் 25 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி நான்காவது இடத்தில் உள்ளார்.

ரி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஒரே இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங், இர்பான் பாதான் ஆகியோர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

ஒருநாள் கிரிக்கெட்டில் சேத்தன் சர்மா, கபில் தேவ், குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

Related posts: