லசித் மாலிங்கவினால் கிரிக்கெட் மாறியது!

Thursday, November 7th, 2019


எதிர்வரும் வருடம் முதல் ஐபிஎல் போட்டிகளில் ட்ராக்-பந்துகளை பரிசோதிக்க தொலைக்காட்சி நடுவர் ஒருவரை (TV umpire) சேர்த்துக் கொள்ள ஐபிஎல் போட்டி ஏற்பாட்டுக் குழு ஆராய்ந்து வருகிறது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது நடுவர்கள் தவிர்ந்த மற்றுமொரு நடுவருக்கே இவ்வாறு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்முறையும் ஐபிஎல் போட்டிகளில் ட்ராக்-பந்துகள் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்தன.

மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க வீசிய பந்து ட்ராக்-பந்தாக அறியப்படாததால் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு வெற்றி வாய்ப்பு கைநழுவியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: