ரோஹித் ஷர்மாவுக்கு இந்த டெஸ்டிலும் வாய்ப்பு கிடைக்காது : கவலையில் ரசிகர்கள்!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ரோஹித் ஷர்மாவுக்கு இனி வாய்ப்பு கிடைக்காது என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் சிறப்பான பார்மில் உள்ள ரோஹித் ஷர்மா, பல்வேறு சாதனைகளை படைத்து தன்னை சிறந்த துடுப்பாட்ட வீரராக நிலைநிறுத்தியுள்ளார்.
ஆனால், டெஸ்ட் அணியில் மட்டும் அவருக்கு வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. உலகக் கிண்ண தொடரில் கலக்கிய ரோஹித்திற்கு, டெஸ்ட் அணியில் கண்டிப்பாக இடம் கிடைக்கும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
அதன்படியே மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் இடம் பிடித்தார். ஆனால், முதல் போட்டியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
அந்தப் போட்டியில் ரஹானே மற்றும் விஹாரி இருவரும் அணியில் இடம்பிடித்தனர். அத்துடன் ரஹானே 81, 102 என தன்னை நிரூபிக்க, விஹாரியும் 32 மற்றும் 93 ஓட்டங்கள் எடுத்து தனது இடத்தை பிடித்துக்கொண்டார்.
இதனால் இரண்டாவது டெஸ்டில் இருவருமே மீண்டும் இடம்பெறுவார்கள் என தெரிகிறது. இதன் காரணமாக ரோஹித் ஷர்மாவுக்கு இந்த டெஸ்டிலும் வாய்ப்பு கிடைக்காது என்ற நிலை உருவாகியுள்ளது.
ஒரே போட்டியால் ரஹானே-விஹாரி இருவரும் ரோஹித்தை ஓரங்கட்டிவிட்டனர். முன்னதாக, குழுவுடன் ஆலோசனை நடத்திய பின்னர் தான் எது சிறந்த அணி என்பதை தீர்மானிக்கிறோம் என்று அணித்தலைவர் கோஹ்லி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|