ரோகித் சதம்: இந்தியா ஆதிக்கம்!
Thursday, October 3rd, 2019விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தியா-தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதியில் முடிவுக்கு வந்தது.
நாணய சுழற்சியில் வென்ற கோஹ்லி தலைமையிலான இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.அதன் படி இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்டகாரர்களாக ரோகித் சர்மா-மயான்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர்.
உணவு இடைவெளிக்கு பின்னரும் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி சிறப்பாக விளையாடியது. 59வது ஓவரின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பொய்ததால் முதல் நாள் போட்டி முடிவுக்கு வந்தது.
சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 115 ஓட்டங்களிலும், மயான்க் அகர்வால் 84 ஓட்டங்களிலும் களத்தில் உள்ளனர். முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 202 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
Related posts:
|
|