மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை- பாகிஸ்தான் தெரிவிப்பு!

Wednesday, September 25th, 2019


பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கட் அணிக்கு மேலதிக கொடுப்பனவுகள் எவையும் வழங்கப்படவில்லை என்று, பாகிஸ்தான் கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.

2009ம் ஆண்டு இலங்கை கிரிக்கட் அணி மீது லாகூரில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, அங்கு சர்வதேச கிரிக்கட் போட்டிகளை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. இந்தநிலையில் இலங்கை அணி அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

இதற்காக இலங்கை அணிக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், அதனை பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி வாசிம் கான் நிராகரித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை அணி எதிர்வரும் 27 ஆம் திகதி தொடக்கம் ஒருநாள் மற்றும் 20க்கு20 கிரிக்கட் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடவுள்ளது. எனினும் இலங்கையின் முன்னணி வீரர்கள் இந்த தொடரை புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: