முரளியை சமன் செய்தார் அஸ்வின்!

Monday, October 7th, 2019


டெஸ்ட் கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் அஷ்வின் ரவிச்சந்திரன்.

இந்தியா ௲ தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நாணிய சுழற்சியில் வென்ற இந்தியா அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ரோகித் சர்மா 176 ஓட்டங்களும், மயங்க் அகர்வால் 215 ஓட்டங்களும் எடுத்தனர்இதையடுத்து 395 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என தென் ஆப்பிரிக்காவுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

நேற்றைய 4ம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு விக்கெட்டுக்கு 11 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், முதல் டெஸ்டின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் டி புருன் அஷ்வின் பந்தில் அவுட்டானார்.இந்த விக்கெட் மூலம் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 350 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இலங்கை ஜாம்பவான் முரளிதரனின் சாதனையை சமன் செய்துள்ளார்.

முரளிதரன் 66 டெஸ்டில் விளையாடி 350 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த உலகசாதனையை படைத்தார். அஸ்வின் 66 டெஸ்டில் பங்கேற்று 350 விக்கெட் கைப்பற்றி சமன் செய்துள்ளார்

Related posts: