முத்துசாமியிடம் சிக்கினார் கோலி!

தென்னாபிரிக்க அணியைச் சேர்ந்த தமிழகத்தை பூர்விகமாக கொண்ட முத்துசாமி தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணித் தலைவர் விராட் கோலியை ஆட்டமிக்கச் செய்துள்ளார்.
சிறப்பாக துடுப்பெடுத்தாடிவந்த நிலை முத்துசாமியின் சுழலில் சிக்கி 20 ஓட்டங்களுடன் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். தனது முதல் சர்வதேச போட்டியில் தனது முதல் விக்கெட்டை விராட் கோலியை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனுரான் முத்துசாமி தென்னாபிரிக்காவின் டேர்பன் நகரில் 1994 ஆம் ஆண்டு பிறந்தார். இடதுகை வீரரான இவர், தென்னாபிரிக்க அணியின் முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ளார். துடுப்பாட்டம், பந்துவீச்சு என சகலதுறை ஆட்டக்காரராக இவர் திகழ்கிறார்.
இவருடைய முன்மாதிரியான வீரர் இலங்கை அணியின் ரங்கன ஹேரத் மற்றும் குமார் சங்கக்கார என்று தெரிவித்துள்ளார். இவர், இந்தியவம்சவளியாக இருந்து தென்னாபிரிக்கா அணியில் விளையாட்டினாலும் இலங்கை வீரர்களை முன்மாதிரியாக கொண்டுள்ளதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|