முகமது அமிர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!

Wednesday, July 31st, 2019

பாகிஸ்தான் அணியின் முன்னணி இடது கை வேகப்பந்து வீச்சாளராக திழ்ந்தவர் முகமது அமிர். இவர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடி வந்தார்.

இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் இருநது ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். 27 வயதே ஆகும் முகமது அமிரின் ஓய்வு ரசிகர்ளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக காலே டெஸ்டில் அறிமுகமான அமிர், 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 119 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

ஒருநாள் மற்றும் ரி 20 கிரிக்கெட் போட்டியில் கவனம் செலுத்துவதற்கான இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts: