மத்தியுஸ், சந்திமல், திஸரவினால் பிரச்சினை – இலங்கையின் தெரிவுக்குழு தலைவர் அசந்தடி மெல்!

Tuesday, September 10th, 2019


மலிங்க இளம்வீரர்களுடன் நன்கு இணைந்து செயற்படுகின்றார், இளம் வீரர்களும் அவ்வாறு அவருடன் இணைந்து செயற்படுகின்றனர், சிரேஸ்ட வீரர்கள் சிலருடன் மலிங்கவிற்கு காணப்பட்ட பிரச்சினைகள் இளம் வீரர்களுடன் இல்லை என இலங்கையின் தெரிவுக்குழு தலைவர் அசந்தடி மெல் தெரிவித்துள்ளார்.

முக்கிய வீரர்கள் இல்லாத நிலையிலும் லசித்மலிங்க அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார் எனவும் அசந்த டிமெல் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் ஒன்றாக மதிய உணவிற்கு செல்கின்றனர் இளம் வீரர்கள் அவரின் பின்னால் உள்ளனர் அவருக்கு ஆதரவு வழங்குகின்றனர் இது நல்ல அறிகுறி எனவும் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மத்தியுஸ் சந்திமல் திஸர போன்ற வீரர்களாலேயே அணிக்குள் பிரச்சினை தற்போது அந்த நிலையில்லை என அசந்த டிமெல் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கருத்தினால் எதிர் காலத்தில் இந்த மூன்று வீரர்களுக்கான வாயப்பு இல்லாமல் போகும் நிலை ஏற்படவாய்புள்ளதாக கிரிக்கெட் விற்பனர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts: