பிரித்தானியா அணியில் இணைகிறார் லசித் மலிங்கா!

Thursday, October 3rd, 2019

பிரித்தானியாவில் புதிதாக தொடங்கவுள்ள 100 பந்துகள் மட்டுமே கொண்ட தி ஹன்ரட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளதை இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்கா உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜூலை 2020-ல் தொடங்கவுள்ள 8 அணிகள் கொண்ட இந்த போட்டி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது மாவட்ட அடிப்படையிலான Natwest T20 Blast உடன் இணைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

லசித் மலிங்காவுடன், உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களான ஷாஹித் அப்ரிடி, ஷாகிப் அல் ஹசன், மொயீன் அலி, பாபர் அசாம், டாம் குர்ரான், குயின்டன் டி கோக், டு பிளெசிஸ், கிறிஸ் கெய்ல், ஆரோன் பிஞ்ச், ரஷீத் கான்.

ஈயோன் மோர்கன், லியாம் பிளங்கெட், கீரோன் பொல்லார்ட், காகிசோ ரபாடா, ஜேசன் ராய் , ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர். ஆகியோரும் தி ஹன்ரட் வரைவு பட்டியலில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அக்டோபர் 20ம் திகதி உறுதிப்படுத்தப்படும் வரைவு பட்டியலில் இருந்து தி ஹன்ரட் தொடருக்கான ஒவ்வொரு அணியும் வீரர்களை ஏலத்தில் எடுத்து அணி வீரர்களை உறுதிப்படுத்தும்.

முன்னதாக, தி ஹன்ரட் தொடரில் Southampton அணியின் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: