பாகிஸ்தானில் பாதுகாப்புடன் சுதந்திரமும் இல்லை – பயிற்சியாளர்!

Monday, August 19th, 2019


பாகிஸ்தானில் பாதுகாப்பும் இல்லை, சுதந்திரமும் இல்லை என அந்நாட்டின் முன்னாள் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஜிம்பாப்வே அணியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிராண்ட் பிளவர் 2014 ஆண்டு முதல் போட்டிங் பயிற்சியாளராக இருந்துள்ளார். இந்நிலையில் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் போட்டிகளுடன் வெளியேறியதால் கடும் விமர்சனத்தை சந்தித்த காரணத்தால் பாகிஸ்தான் அணியை பலப்படுத்த முக்கிய மாற்றங்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் எடுத்தது.

அதை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அனைத்து பயிற்சியாளர்களின் ஒப்பந்தத்தையும் இரத்து செய்தது. இதுகுறித்து பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட பிளவர் அணியில் உள்ள சிக்கல்கள் குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுவதாவது,

“பாகிஸ்தானில் பாதுகாப்பிலும், சுதந்திரத்திலும் இல்லை. நான் பயிற்சியாளராக இருந்த போது பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் குழப்பங்கள் உள்ளதால் அணியின் வீரர்கள் சிலர் என்னை ஏமாற்றி உள்ளனர்.

எனது பணிக்காலத்தின் போது அந்த அணியின் சிறந்த வீரர் பாபர் அசாம். அந்த அணி எதிர்காலத்தில் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள். வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் பின்னால் நில்லுங்கள். நேர்மறை சிந்தனையோடு செயல்படுங்கள்” என்று கூறியுள்ளார்.

Related posts: