பாகிஸ்தானின் பாதுகாப்பு திட்டங்கள் குறித்து மதிப்பீடு செய்யப்படும் – ஐசிசி !

Tuesday, September 17th, 2019

இலங்கை அணி இம்மாத இறுதியில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 20க்கு இருபது போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளது.

இந்நிலையில், இந்த தொடருக்கான நடுவர்களையும் போட்டி மத்தியஸ்தர்களையும் நியமிப்பதற்கு முன்னர் பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் மதிப்பீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானில் உருது மொழியில் வெளிவரும் பத்திரிகையொன்றில் மேற்படி செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக இந்துஸ்தான் டைம் ஒப் இந்தியா பத்திரிகை சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, சர்வதேச கிரிக்கட் பேரவையுடன் இணைந்து பாகிஸ்தான் கிரிக்கட் சபை மேற்படி பாதுகாப்பு திட்டங்கள் குறித்து மதிப்பீடு செய்யவுள்ளதாகவும் குறித்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: