தொடர் தோல்விக்கு பின் மலிங்காவின் பேட்டி!

Friday, September 6th, 2019


மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரை நியூசிலாந்திடம் இழந்த பின்னர், தனது அணி திறமையை காட்டும் வரை தோல்வி ஒரு பொருட்டல்ல என இலங்கை டி-20 அணித்தலைவர் லசித் மலிங்கா கூறியுள்ளார்.

இரண்டாவது டி-20 தொடரில் 162 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்த இலங்கை அணி, நியூசிலாந்திடம் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரை நியூசிலாந்து 2-0 என கைப்பற்றியுள்ளது. இரு தரப்பினரும் மோதும் 3வது டி-20 போட்டி செப்டம்பர் 6ம் திகதி பல்லேகேலில் நடைபெறவுள்ளது.

இலங்கை தொடர்ச்சியாக நான்காவது டி-20 தொடரை இழந்த பின்னர் அணித்தலைவர் மலிங்கா அளித்த பேட்டியில், நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம். அனைத்து இளம் வீரர்களும் அவர்களால் முடிந்த சிறப்பான ஆட்டதை விளையாடினார்கள், நாங்கள் ஒரு நல்ல ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தோம்.

நாங்கள் கடுமையாகப் போராடினோம், ஆனால் முக்கியமான தருணங்களில் அதிர்ஷ்டம் இல்லை. நாங்கள் சிறப்பான கிரிக்கெட் விளையாடியதற்கு மகிழ்ச்சி, அணி முன்னேற வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என மலிங்கா கூறியதை ஐ.சி.சி மேற்கோளிட்டுள்ளது.

அதே சமயம் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா, இளைஞர்களுக்கு சுதந்திரம் அளிப்பதை வலியுறுத்தினார்.

இளைஞர்களுக்கு அவர்களின் இயல்பான விளையாட்டை விளையாடுவதற்கு நாங்கள் சுதந்திரம் கொடுக்க விரும்புகிறோம், அவர்கள் டி-20 போட்டிகளை எவ்வாறு விளையாடுவது என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள், மேலும் இளம் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டிற்காக உருவாக்கப்பட்டதைக் காட்ட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இலங்கை அணி திறமையை காட்டும் வரை தோல்வி ஒரு பொருட்டல்ல. நிச்சயமாக, நாங்கள் இறுதி போட்டியை வெல்ல விரும்புகிறோம், ஆனால் எங்கள் அணியின் பலத்தையும் சோதிக்க விரும்புகிறோம் என்று வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா கூறியுள்ளார்.

Related posts: