தென்ஆப்பிரிக்கா தொடர் : டோனி வெளியேற்றம் !

Saturday, August 31st, 2019


தென்ஆப்பிரிக்கா இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாட இருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 15 ஆம் திகதி தரம்சாலாவில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்எஸ் டோனிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. காயத்தில் இருந்து குணமடைந்த ஹர்திக் பாண்டியா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். புவனேஷ்வர் குமார் நீக்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை 3-0 எனக் கைப்பற்றியுள்ளதால் அதே அணிதான் தென்ஆப்பிரிக்கா தொடரிலும் களம் இறங்குகிறது.

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. விராட் கோலி (தலைவர்), 2. ரோகித் சர்மா (துணைக் தலைவர்), 3. தவான், 4. கேஎல் ராகுல், 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. மணிஷ் பாண்டே, 7. ரிஷப் பந்த், 8. ஹர்திக் பாண்டியா, 9. ஜடேஜா, 10. குருணால் பாண்டியா, 11. வாஷிங்டன் சுந்தர், 12. ராகுல் சாஹர், 13. கலீல் அகமது, 14. தீபக் சாஹர், 15. நவ்தீப் சைனி.

Related posts: