டோனியை தூக்கி எறிய இதுவே சரியான நேரம் – காம்பீர்!

Tuesday, October 1st, 2019


இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனியை அணியில் இருந்து நிரந்தரமாக நீக்கிவிட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்கு இதுவே சரியான நேரம் என்று முன்னாள் வீரர் காம்பீர் தெரிவித்துள்ளார்.

டோனி தலைமையிலான இந்திய அணி மூன்று வித கோப்பைகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமின்றி டோனி இந்திய அணிக்கு கடைசி கட்டத்தில் ஒரு சிறந்த பினிஷராகவும் இருந்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபகாலமாக டோனியின் ஆட்டம் அந்தளவிற்கு இல்லாததால், உலககோப்பை தொடருக்கு பின் அவரே எந்த வித தொடரிலும் விளையாடமால் ஓய்வு எடுத்து வருகிறார். இருப்பினும் டோனி இடத்தை பிடிப்பதற்கு யாரும் இந்திய அணிக்கு கிடைக்காததால், தேர்வு குழுவினர் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான காம்பீர், நான் எப்போதுமே ஒன்றில் தெளிவாக இருக்கிறேன். ஓய்வு அறிவிப்பது என்பது தனிப்பட்ட ஒருவரின் முடிவு, அணித் தேர்வுக்குழுவினர்தான் டோனியிடம் பேசி எதிர்கால முடிவு என்ன திட்டம் என்ன என்பதை விவாதிக்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் இந்தியாவுக்காக ஆடும் ஒரு வீரர் தன் இஷ்டத்துக்கு ஒரு தொடரில் ஆடுவேன், அடுத்த தொடரில் விலகுவேன் என்று தொடர்களை தன் இஷ்டத்துக்கு தேர்வு செய்ய முடியாது.

டோனிக்கு மாற்று வீரர் என்று கூறப்படும், ரிஷப் பண்ட்டின் ஷாட் தேர்வு எப்போதும் சரியாகவே இருந்து விடாது என்பதை அணி நிர்வாகம் புரிந்துகொள்ள வேண்டும். அவரது ஆட்டம் சூடுபிடிக்கும் நாளில் அவர் வெற்றி வீரர் என்று கூறியுள்ளார்.

Related posts: