டக்வெத் லூவிஸ் முறை: 34 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி!

Wednesday, June 5th, 2019

உலக கிண்ண கிரிக்கட் தொடரில் கார்டிஃபில் இடம்பெற்ற நேற்று இடம்பெற்ற 7வது போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியை எதிர் கொண்ட இலங்கை அணி 34 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் இலங்கை அணி துடுப்பாடியது. இலங்கை அணி துடுப்பாடிய போது மழை குறுக்கிட்டமை காரணமாக போட்டி 41 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

எனினும் இலங்கை அணி 36.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து, 201 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு டக்வெத் லூவிஸ் முறைப்படி 41 ஓவர்களில் 187 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதற்கமைய, தமது வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 32.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து, 152 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

Related posts: