சுருண்டது பங்களாதேஷ்: வலுவான நிலையில் இந்தியா!

இந்திய- பங்களாதேஷ் அணிகள் பங்கேற்கும் முதலாவது பகலிரவு போட்டி நேற்று இடம்பெற்றது.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 106 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.இந்திய பந்துவீச்சில் இஷாந்த் சர்மா 22 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதனையடுத்து, தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி நேற்றைய முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்திய அணி சார்பாக விராட் கோலி ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.
Related posts:
ஹத்துருசிங்கவின் வகுக்கப்பட்டுள்ள வியூகம் இவைதான்!
2018-இல் முதலிடத்தில் இலங்கை!
தென்மாராட்சி பிறிமியர் லீக் தொடரை ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
|
|