சிரேஷ்ட வீரர்கள் பாகிஸ்தான் செல்ல இணக்கம்!

Thursday, November 21st, 2019


எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்த தொடரில் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கெண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் இருபதுக்கு ௲ 20 போட்டிகளில் விளையாடியது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணங்களை காட்டி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான திமுத் கருணாரத்ன, சுரங்க லக்மாலம், அஞ்சலோ மெத்தியூஸ் உள்ளிட்ட பலர் இந்த சுற்றுப் பயணத்தில் கலந்துகொள்ளவில்லை. எனினும் பாகிஸ்தான் கிரிக்கெட் நிறுவனமும் அந் நாட்டு அரசாங்கமும் அளித்த அதியுயர் பாதுகாப்பினால் இந்த தொடரை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் வெற்றிகரமாக முடித்திருந்தமை குறிப்பிட்த்தக்கது.

Related posts: