சர்ச்சையில் சிக்கிய தினேஷ் கார்த்திக்!

Monday, September 9th, 2019

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றிருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் நடந்து வரும் கரிபீயன் பிரிமியர் லீக் (சி.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தின்போது அவர் நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியுடன் இருந்துள்ளார். கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியை பெறாமல் அவர் அங்கு சென்றதால் ஒப்பந்த விதிமுறையை மீறியதாக முறைப்பாடு எழுந்துள்ளது.

தினேஷ் கார்த்திக், அந்த அணியின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்குல்லத்துடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியானது.

இதையடுத்து அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Related posts: