சச்சினின் நெருங்கும் கோலி.. !

Tuesday, August 13th, 2019

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்ற இந்திய வீரர்களின் பட்டியலில் இந்திய அணித்தலைவர் விராட் கோலி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று இடம்பெற்ற நிலையில் குறித்த போட்டியில் அபாரமாக விளையாடி விராட் கோலி சதம் ஒன்றை பெற்றுக்கொண்டார்.

குறித்த போட்டியின் 32வது ஓவரின் போது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியின் 11 ஆயிரத்து 363 ஓட்டங்களை விராட் கோலி கடந்தார். இதன்மூலம் அவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையை பெற்றுக்கொண்டார்.

இதற்கு முன்னர் குறித்த இடத்தில் இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் சௌரவ் கங்குளி நீடித்தார்.

இதேவேளை 18 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டங்களை பெற்றுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் அந்த பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


நியூசிலாந்து அணியின் அனைத்து கிரிக்கட் போட்டிக்கும் வில்லியம்சன் தலைவர்
நாளைய இருபதுக்கு20 போட்டியிலிருந்து அவுஸ்திரேலிய வீரர்கள் இருவர் விலகல்!
தசாப்தங்களின் பின் பாக். டெஸ்ட் தொடரை வென்றது நியூசிலாந்து!
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் அயர்லாந்து அணியில்!
விராட் கோஹ்லிக்கு இலங்கை வீரர்கள் வாழ்த்து!