சச்சினின் சாதனையைவெறும் 89 போட்டிகளில் முறியடித்த டிம் சவுத்தி!

Saturday, August 17th, 2019


இந்திய ஜம்பவான் சச்சின் டெண்டுல்கர் 329 டெஸ்ட் போட்டிகளில் செய்த சாதனையை 89 டெஸ்ட் போட்டியில் டிம் சவுத்தி சமன் செய்து அசத்தியுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. காலி மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி 19 பந்துகளில் 14 ஓட்டங்கள் எடுத்தார்.

இதன்போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தனஞ்செய டி சில்வாவின் பந்தை மிகப்பெரிய சிக்சர் ஒன்றை அடித்தார் சவுத்தி. இது டெஸ்ட் போட்டிகளில் அவர் அடிக்கும் 69வது சிக்ஸ் ஆகும்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய ஜம்பவாம் சச்சின் அடித்த சிக்ஸர்களை, டிம் சவுத்தி சமன் செய்துள்ளார்

டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 69 சிக்சர்களை விளாசியுள்ளார். டிம் சவுத்தி தற்போது அதே எண்ணிக்கையைச் சமன் செய்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 329 இன்னிங்ஸ்களில் 69 சிக்சர்களையும் டிம் சவுதி 89 இன்னிங்ஸ்களிலும் 69 டெஸ்ட் சிக்சர்களையும் அடித்துள்ளனர்

Related posts: