ஒவ்வொரு வருடமும் T20 உலகக் கிண்ணம் – ICC

Friday, October 18th, 2019


எதிர்வரும் 2023ஆம் வருடம் முதல் 2031ஆம் வருடம் வரையிலான கால எல்லைக்கு உட்படுத்தப்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான கால அட்டவணை (FTP)(Future Tours Program) தொடர்பில் சர்ச்சை நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசேடமாக இந்தியா கிரிக்கெட் வாரியத்தின் கடுமையான எதிர்ப்புகளுடன் குறித்த கால அட்டவணைக்கான அனுமதி கிடைக்கப் பெற்றமையினாலேயே ஆகும்.

துபாயில் இடம்பெற்று முடிந்த ICC கலந்துரையாடலில் ஒவ்வொரு வருடத்திலும் ICC போட்டிகளை நடாத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது .

ICC இனால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிப்பதாவது, எட்டு வருட காலமாக ஆண்கள் பிரிவுக்கான ICC போட்டிகள் 08, பெண்கள் போட்டிகள் 08 மற்றும் 19 வயதுக்குட்பட்ட ஆண் மற்றும் பெண் பிரிவுகளுக்கான போட்டிகள் 4 வீதவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் சில தகவல்களில் ஒவ்வொரு வருடமும் இருபதுக்கு – 20 கிரிக்கெட் உலகக் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை (நான்கு வருடங்களுக்கு ஒருமுறைக்கு மாற்றீடாக) ஒருநாள் உலகக் கிண்ண போட்டியினையும் நடாத்த ஜகத் கிரிக்கெட் கவுன்சில் தயாராகி வருவதாகவும் கூறப்படுகின்றது.

Related posts: