ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கட்டும் உள்ளடக்கம்.!
Tuesday, August 13th, 20192028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கட்டையும் உள்ளடக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. மெல்போர்ன் கிரிக்கட் சபையின் தலைவர் மைக் கெட்டிங் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 18 மாதங்கள் இது தொடர்பான நீடித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த காலங்களில் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை, தேசிய ஊக்கமருந்து தடுப்பு பிரிவுடன் இணைந்து செயற்படாமை இதற்கு ஒரு தடையாக இருந்த போதும், தற்போது அந்தநிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இது ஒரு சாதகமான சூழ்நிலை. எனவே 2028ம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில், கிரிக்கட்டை உள்ளடக்ககூடிய சாத்தியங்கள் அதிகம் இருக்கின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
23 ஓட்டங்களில் சுருண்டது நேபாளம் - இலங்கை அணி இலகு வெற்றி!
நாணயச் சுழற்சியில் நியூசிலாந்து வெற்றி!
சிரேஷ்ட வீரர்கள் பாகிஸ்தான் செல்ல இணக்கம்!
|
|