ஐந்து நாடுகளுக்கு எதிராக விளையாடவுள்ள இந்திய அணி!

இந்திய
கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை, இந்தியாவில் ஐந்து நாடுகளுக்கு எதிரான கிரிக்கட் தொடர்களை
2019-2020 காலப்பகுதியில் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஸ் அணிகளுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா விளையாடவுள்ளது.
தென்னாப்பிரிக்க இந்திய அணிகளுக்கு இடையிலான தொடர் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் திகதி ஆரம்பாகிறது.
நவம்பர் மாதம் 3ம் திகதி முதல் பங்களாதேஸ் இந்தியாவுக்கு சுற்றுப் பணத்தை மேற்கொள்கிறது.
இதனை அடுத்து டிசம்பர் மாதம் மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதுடன், 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் சிம்பாப்வே அணி இந்தியாவிற்கு செல்கிறது.
அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா ஜனவரி மாதத்தில் இந்தியா செல்லவுள்ள அதேநேரம், மார்ச் மாதம் தென்னாப்பிரிக்க அணி மீண்டும் இந்தியா சென்று ஒருநாள் கிரிக்கட் தொடரில் பங்கேற்கவுள்ளது.
Related posts:
|
|