உலகின் கவனத்தை திருப்பிய இலங்கை அணி!

Tuesday, October 1st, 2019

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கு மகத்தான அதிதீவிர வழங்கப்பட்டுள்ளமை குறித்து சர்வதேச ரீதியாக அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

10 வருடங்களின் பின்னர் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி வீரர்களுக்கு, ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கு கொடுக்கும் பாதுகாப்புக்கு சமமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று கராச்சியில் நடைபெறுகிறது. இதற்காக இலங்கை அணி வீரர்கள் அழைத்து வரும் போது வழங்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. வீரர்களை சுற்றிவளைத்து பாதுகாப்பாக அழைத்து செல்லும் விதம் பல நாட்டு கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். அதன் பின்னர் சர்வதேச நாடுகள் பாகிஸ்தானில் கிரிக்கெட் சுற்றுத்தொடரில் பங்கேற்க மறுப்பு தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: