உலகக்கோப்பை தொடர்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!

Friday, April 19th, 2019

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக டூ பிளீசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் அடுத்த மாதம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் தங்களது 15 வீரர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா தங்களது 15 பேர் கொண்ட உலகக்கோப்பை அணியை அறிவித்துள்ளது.

இந்த அணிக்கு பாப் டூ பிளீசிஸ் தலைவராக செயல்பட உள்ளார். டி காக், ஆம்லா, டேவிட் மில்லர், டுமினி, மார்க்ராம் ஆகியோர் துடுப்பாட்டத்தில் மிரட்ட உள்ளனர்.

அதேபோல் பந்துவீச்சில் மிரட்ட டேல் ஸ்டெயின், ரபாடா, நிகிடி, இம்ரான் தாஹிர் ஆகியோரும் உள்ளனர்.

Related posts: