இலங்கை அணியின் புதிய தலைவர்கள் நியமனம்!

Tuesday, September 10th, 2019


இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு இருபது போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் சுறறுப்பிரயாணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணியின் ஒரு நாள் அணி தலைவராக லாஹிரு திரிமன்னவும் இருபதுக்கு இருபது அணி தலைவராக தசுன் சானக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பாதுகாப்பு காரணங்களை கருத்திற் கொண்டு குறித்த தொடரில் இலங்கை அணியின் முக்கிய வீரர்கள் சிலர் பங்குகொள்ள மறுப்பு தெரிவித்துள்ளனர்.

திமுத் கருணாரட்ன தினேஸ் சந்திமல் அஞ்சலோ மத்தியுஸ் சுரங்க லக்மால் நிரோசன் டிக்வெல குஜால் ஜனித் பெரோ தனஞ்செய சில்வா திசார பெரேரா லசித்மலிங்க அகில தனஞ்செய ஆகிய வீரர்களே பாதுகாப்பு காரணங்களிற்காக பாகிஸ்தான் செல்ல மறுத்துள்ளனர் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தில் இடம்பெற்ற பாகிஸ்தான் தொடர் குறித்த விசேட கலந்துரையாடலின் போதே குறித்த வீரர்கள் தமது அதிருப்தியினை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: