இறுதிப்போட்டிக்கு செரீனா முன்னேற்றம்!

Saturday, September 7th, 2019


அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் முன்னணி விராங்கனை செரீனா வில்லியம்ஸ் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ், 5ம் தரநிலை வீராங்கனை எலினா சுவிட்டோலினாவை 6-3, 6-1 என்ற செட்கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் அமெரிக்க ஒபனில் 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறார்.

கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் இதுவரை 23 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்த முறையும் பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது

Related posts: