இறந்துபோன வீரர் கண் முன் வந்தார் : அதிர்ச்சி கொடுத்த ஸ்டீவ் ஸ்மித்!

இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர் பந்தில் அடிவாங்கியபோது, இறந்து போன வீரர் தன் கண் முன் வந்துபோனதாக அவுஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடந்த ஆஷஸ் 2வது டெஸ்டில், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் வீசிய பந்தில், அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் படுகாயமடைந்தார்.
அவரது கழுத்தை பந்து பலமாக தாக்கியதில், நிலை தடுமாறி தரையில் விழுந்தார். வலியால் துடுத்த ஸ்மித், ஒரு கட்டத்தில் தனக்கு என்ன நடந்தது என்பதை உணர முடியாமல் இருந்தார்.
அதன் பின்னர் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடவில்லை. எனினும் 4வது டெஸ்டில் விளையாடும் முனைப்புடன் அவர் தயாராகி வருகிறார். இந்நிலையில், ஆர்ச்சர் பந்தில் அடிபட்டது குறித்து அவர் கூறுகையில்,
‘ஆர்ச்சர் வீசிய அந்த ஒரு பந்தில் நான் கீழே விழுந்தேன். கீழே விழுந்ததும் எனக்கு ஒரு நிமிடம் பில் ஹூயூக்ஸ் (பந்து தாக்கியதில் உயிரிழந்த அவுஸ்திரேலிய வீரர்) தான் முதலில் ஞாபகத்திற்கு வந்தார்.
அவரது ஞாபகம் ஒரு நிமிடம் வந்து சென்றது. பந்து தாக்கியதும் மனநிலை வேறு விதத்தில் இருந்தது. அதன் பிறகு சுமாராகி வெளியேறினாலும், அன்று இரவு எனக்கு மிக மோசமான இரவாக அமைந்தது.
6 பீர் குடித்தால் எப்படி இருக்குமோ அதைப் போன்று அவ்வளவு கடினமாக இருந்தது என்று மருத்துவக்குழுவிடம் கூறினேன். அந்த நினைவுகளை மறக்க எனக்கு சிறிது நாட்கள் ஆனது.
தற்போது 4வது டெஸ்ட் போட்டியில் விளையாட தயாராகி வருகிறேன். கண்டிப்பாக 4வது டெஸ்டில் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்று நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|